வெள்ளி, 1 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 9 டிசம்பர் 2021 (17:32 IST)

விஜய்யின் 'பீஸ்ட்' படம் புதிய சாதனை

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும்  பீஸ்ட் #Beastபட புதிய சாதனை படைத்துள்ளது. 
 
நடிகர்  விஜய்யின் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். 
 
நடிகர் விஜய்யின் 65 படமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், நெல்சன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீஸ்ட் #Beastபடத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், வரும் டிசம்பர்-03 ஆம் தேதி  பீஸ்ட் படத்தின் முதல் சிங்கில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில், இந்த ஆண்டில் டுவிட்டரில் அதிக லைக்குகள் பெற்ற படமாக விஜய்யின் பீஸ்ட் படம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் படம் 2021 ஆம் ஆண்டில்  டுவிட்டர் ஆதிக்கம் பேரால் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் பட்டியலில் 8 வது இடம் பிடித்துள்ளது.