சொதப்பிய வெற்றிமாறன்!.. அரசன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்?!..
சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் அரசன். சிம்பு படம் என்பதால் வழக்கம்போல் இந்த படமு பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பல நாட்கள் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. ஒருபக்கம், கென் கருணாசை வைத்து ராஜன் வகையறா என்கிற திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவில்லை. பல நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் ஷூட்டிங் நடக்காததால் அப்செட் ஆன விஜய் சேதுபதி அரசன் படத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்திலும் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்து பின் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்திலும் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்து பின் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.
