ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா ரிலீஸ் தேதி அறிவிப்பு!...
நடிகர் மற்றும் தற்போதையை முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் வேட்டைக்காரன் படத்தில் நடித்தபோது அப்பாவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருந்தார்.
அதன்பின் லண்டனில் சினிமா இயக்கம் பற்றிய படிப்பை படித்த ஜேசன் இயக்குனராக வேண்டும் என முடிவெடுத்தார். விஜயின் மகன் நடிகராக வருவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் அவரோ லைக்கா தயாரிப்பில் சிக்மா என்கிற படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்நிலையில்தான், இந்த படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி வெளியாவதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு ஜேசன் சஞ்சய் கொடுத்த பேட்டியில் அவரின் அப்பா மற்றும் தமிழக முதல்வர் விஜய் பற்றி பேசிய வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு ஜேசன் சஞ்சய் கொடுத்த பேட்டியில் அவரின் அப்பா மற்றும் தமிழக முதல்வர் விஜய் பற்றி பேசிய வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.