1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. jailer 2 team fixing the audio launch date

ஜெயிலர் 2 ஆடியோ லான்ச்சுக்கு தேதி குறிச்சாச்சி!.. தமிழக அரசு அனுமதி கிடைக்குமா?!..

jailer2
கூலி படத்திற்கு பின் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. ஜெயிலர் படத்தின் முதல் பாகம் ஹிட் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க நினைத்தது. முதல் பாகத்தை இயக்கியே நெல்சனே 2ம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார். முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத் 2ம் பாகத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் முதல் பாடல் வருகிற 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த திரைப்படம் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், வருகிற அக்டோபர் 2ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிலையில் ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அங்கேயே நடக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், தற்போது அரசு மாறிவிட்டது. நேரு விளையாட்டு அரங்கில் வைத்துதான் ரஜினி காக்கா - கழுதை கதையெல்லாம் கூறினார். எனவே, அவருக்கு அனுமதி கிடைக்குமா?. முதலில் அவர்கள் அனுமதி கேட்பார்களா? என்பதும் தெரியவில்லை.

ஒருபக்கம் படக்குழு அனுமதி கேட்டு அதற்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்தால் அது விஜய்க்கு கெட்ட பெயரை கொண்டுவரும் என்பதால் அனுமதி கேட்டால் கொடுத்துவிடுவார்கள் எனவும் சொல்கிறார்கள். ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா அக்டோபர் 6ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஜெயிலர் 2 பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.. ரிலீஸ் தேதியையும் சொல்லிட்டாங்களே!...