வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (11:20 IST)

ஆஸ்கர் விருது இயக்குனருக்கு ரூ.1 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்..!

ஆஸ்கர் விருது வென்ற தமிழ் திரைப்பட இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ரூபாய் ஒரு கோடி பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். சமீபத்தில் ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. 
 
இதனை அடுத்து இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்  இயக்கத்தில் உருவான ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதனை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது. 
 
இந்த நிலையில் ஆஸ்கார் விருதை பெற்றுவிட்டு நேற்று கார்த்திகி கோன்சால்வ்ஸ் இந்தியா திரும்பின நிலையில் அவரை அழைத்து பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு கோடி ரூபாய் பரிசு தொகையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.
 
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ‘தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் முதல்வர் அவர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran