1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (11:14 IST)

சிறந்த விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு, ரேசன் அட்டைக்கு கேழ்வரகு.. வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் தற்போது சட்டசபையில் தாக்கல் செய்து வருகிறார். இந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
 
கோவையில், கருவேப்பில்லை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு
 
மதுரை மல்லிப்பூ உற்பத்தியை அதிகரிக்க ரூ.7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும்!
 
கடலூர், குமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு; 
 
5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டேரில் பலா சாகுபடியை உயர்த்த இலக்கு!
 
சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு”
 
60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ரூ15 கோடி செலவில் வழங்கப்படும்
 
குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும்
 
சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருதும், ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்படும்
 
விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பாங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வட்டார அளவில் வாட்ஸ் அப் குழு அமைக்கப்படும்!”
 
பருவத்திற்கு ஏற்ற பயிர் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்
 
Edited by Mahendran