1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified திங்கள், 20 மார்ச் 2023 (23:20 IST)

தமிழ்நாடு பட்ஜெட்டிற்கு கரூர் திருக்குறள் பேரவை பாராட்டு

palaniyappan
நாவின் எந்த பகுதியிலும் கற்கண்டை வைத்தால் எப்படி இனிக்குமோ ? அதை போல நம் தமிழ்நாடு அரசின் வரவு செலவு திட்ட அறிக்கை இருப்பதாக கரூர் திருக்குறள் பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாடு அரசின் 2023 – 2024 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளதாகவும் அந்த வரவு செலவு திட்ட அறிக்கைக்கு பாராட்டுகளையும் கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனர் மற்றும் செயலர் மேலை.பழநியப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.,
 
தமிழ்நாடு அரசின் 2023 – 2024 ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளதாகவும், நாவின் எந்த பகுதியில் கற்கண்டை வைத்தாலும் இனிக்கும் என்பது போல, பட்ஜெட்டின் ஒவ்வொரு அறிவிப்பும் சொன்னதை செய்வோம் என்பதனை நிறைவேற்றும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ ஆயிரம் மாதம் வழங்குவதும், கோவையில் செம்மொழி பூங்கா, கோவை, மதுரை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களையும் அறிவித்துள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்ட விரிவாக்கம் என்று  இத்தனைக்குப் பின்னும் நிதிப்பற்றாக்குறை குறைந்திருப்பது பாராட்டிற்குரியது.

இந்த அரசு சொன்னதை செய்யும் சொல்லததையும் செய்யும் என்ற முதல்வரின் குரலுக்கு ஏற்றாற் போல், இந்த வரவு செலவு அறிக்கையினை கரூர் திருக்குறள் பேரவை வரவேற்று பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது என்றும் கூறினார்.