செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (13:36 IST)

இந்த தடவை தனுஷ் ரோல் ரொம்ப பெருசு..! – சர்ப்ரைஸ் செய்யும் ரஸ்ஸோ பிரதர்ஸ்!

the grey man
சமீபத்தில் வெளியான தி க்ரே மேன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் ரஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் ரியான் கோஸ்லிங், க்ரிஸ் எவான்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்து வெளியான படம் தி க்ரே மேன். இந்த படத்தில் நடிகர் தனுஷும் நடித்திருந்தார்.

நெட்ப்ளிக்ஸில் வெளியான இந்த படத்தில் தனுஷ் நடித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் சில காட்சிகள் மட்டுமே தனுஷ் வந்தது சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் உலக அளவில் தி க்ரே மேன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தி க்ரே மேனின் இரண்டாம் பாகத்திற்கான பணியில் ரஸோ பிரதர்ஸ் இறங்கியுள்ளனர். தனுஷுக்கு முக்கியமான ரோல் உள்ளதாக ஏற்கனவே ரஸோ பிரதர்ஸ் கூறியிருந்தனர். இந்த இரண்டாம் பாகத்தில் தனுஷ் படம் முழுக்கவே வர உள்ளாராம். மேலும் தனுஷுக்கு ப்ளாஸ்பேக் காட்சிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

க்ரே மேன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தான் தயாராகிவிட்டதாக சமீபத்தில் தனுஷ் வெளியிட்ட ஆடியோவும் வைரலாகி வருகிறது.