1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (08:41 IST)

ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படம்… வெளியான செகண்ட் சிங்கிள்!

நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் அனல் மேலே பனித்துளி என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’அனல் மேலே பனித்துளி’. இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள விரைவில் சோனி லிவ் தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கீச்சே கீச்சே’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.