தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் போட்டியாளர்!
தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் நடித்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன்
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் இந்த படத்தின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆஜித் ஒரு சிறு கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு செல்வராகவன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆஜித் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் மேலும் அவர் செல்வராகவனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது