வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (15:54 IST)

விரைவில் ஹன்சிகாவுக்கு டும் டும் டும்… மாப்பிள்ளை பற்றி வெளியான தகவல்!

நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வந்தார். அந்த படம் முடிந்த நிலையில் அவர் கைவசம் வேறுபடங்கள் இல்லை என்றானது.

ஆனால் இந்த ஆண்டில் 8 படங்களில் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் கடைசியாக இப்போது அவர் வாலு மற்றும் ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவைத் தவிர எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸ், மற்றும் தனுஷுடன் ஒரு படம் என பிஸியாகியுள்ளார்.

இந்நிலையில் விரைவில் ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவரை கரம்பிடிக்க உள்ள மாப்பிள்ளை ஒரு அரசியல் பிரபலமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.