வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: புதன், 10 மே 2023 (22:29 IST)

திருநகரியில் உள்ள ரங்க நாதப்பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்

thirumangai alwar
திருவெண்காடு அருகே திருநகரியில் உள்ள ரங்க நாதப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 108 திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும்.

இந்தக் கோவிலில் திருமங்கை ஆழ்வார் தனி சன்னதி அருள் பாலிக்கிறார். பஞ்ச நரசிம்மர் கோவில்களில் இரணியன் நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மர் சுவாமிகள் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இக்கோவிலில் வசந்த உற்சவம் நடைபெறும். எனவே அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் நந்தவனத்தில் எழுந்தருளினர்.

அப்போது, பட்டாச்சாரியர்கள் பாராயணம் செய்தனர். சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவிர் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.