1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 மே 2023 (18:30 IST)

சங்கடஹர சதூர்த்தி அன்று விநாயகர் விரதத்தால் ஏற்படும் நன்மைகள்..!

Lord Vinayagar
சங்கடகர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபட்டு விரதம் இருந்தால் ஏராளமான நன்மை கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை மற்றும் வளர்பிறை என இரண்டு சங்கடஹர சதுர்த்திகள் வரும் என்பதும் அன்றைய தினத்தில் விநாயகப் பெருமானுக்கு விரதம் இருந்தால் கோடி நன்மை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
விநாயகருக்கு உகந்த நாளான சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பலவகையான மாலைகளை அவருக்கு சூட்டி அருகம்புல் மல்லிகை பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும் 
 
பின்னர் நைவேத்தியம் செய்து கொழுக்கட்டை சமைத்து விரதம் இருக்க வேண்டும். விரதத்தின் போது விநாயகர் துதி பாட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் செய்து வந்தால் திருமண தடை, கடன் தொல்லை உடல்நல கோளாறு ஆகிய பிரச்சினைகள் இருந்து விடுபடலாம் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran