குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்குவது?
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் என்று உண்டு என்பதும் அவ்வப்போது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே.
குறிப்பாக மாசி சிவராத்திரி தினத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குலதெய்வம் தெரியாத நபர்கள் என்ன செய்வது என்பது குறித்து ஆன்மீகவாதிகள் பதில் அளித்துள்ளனர்.
குலதெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாக வணங்கலாம் என்றும் குரு பகவானின் ஸ்தலம் தான் திருச்செந்தூர் முருகன் என்பதால் குலதெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாக நினைத்து வழங்கினால் நல்ல நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் குலதெய்வம் தெரியாதவர்கள் திருமணம் செய்து கொண்ட பின்னர் மனைவி குடும்பத்தின் குலதெய்வத்தை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கலாம் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran