திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 மே 2023 (22:27 IST)

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 10 ஆம் தேதி சித்திரைத் தேரோட்டம்

tiruvallikeni parthasarathi temple
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சித்திரை திருவிழா  கடந்த மே 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவில் பெருமாள் தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம், பரரமபத நாதன் திருக்கோலம், சிம்ம வாகனம்,  சூரிய பிரபை, சந்திர பிரபை ஆகிய வாகனங்களில் பக்தர்களுக்கு எழுந்தருளுகிறார்.

கடந்த 6 ஆம் கருடசேவை- கோபுர தரிசனம், ஏகாந்த சேவை,  அம்சவாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

இன்று, காலை 5:30 மணிக்கு பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் நிகழ்ச்சியும், இரவு 8:30 மணிக்கு அனுமந்த வாகன திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வரும் 10 ஆம் தேதி காலை தேரோட்டமும் நடைபெறவுள்ள நிலையில் காலை  மணிக்கு பெருமாள் தேரில் எழுந்தருளுவார், காலை 7 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்படு, 12 ஆம் தேதி காலை 6: 15 மணிக்கு பல்லக்கு தீர்த்தவாரியும், இரவு 7: மணிக்கு கண்ணாடிப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும் என்று கோவில்  நிர்வாகம் தெரிவித்துள்ளது.