புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பது ஏன் தெரியுமா...?
புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பொதுவாக புரட்டாசி மாதத்தின் போது தான் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலமாக உள்ளது. இதனால் இதுவரை பூமி வெயிலால் சூடாகி இருக்கும். மழை பொழியும் போது, அதை ஈர்த்து புவியின் வெப்பத்தை குறைக்கும் பொருட்டு, தன்னுள் இருக்கும் சூட்டை வெளியில் விட ஆரம்பிக்கும்.
இதனால் புரட்டாசி மாதம் சூட்டை கிளப்பி விடும். இது வெயில் காலத்தில் சூடான காலநிலையைக் காட்டிலும் மிக மோசமான விளைவுகளை தரக் கூடியது.
ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் புரட்டாசி மாதம் தனித்துவமானது தான். மற்ற மாதங்களை விட புரட்டாசி மாதத்தில் தான் வெயிலும், காற்றும் குறைந்து காணப்படும். இதனால் பூமி தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள அதிக அளவிலான வெப்பத்தை வெளிவிடும்.
இதனால் நமது உடலில் வெப்பத்தின் தன்மை சற்று அதிகரிக்கும். இந்த அதிக வெப்பத்தை சமாளிப்பதற்காக தான் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக மூலிகைகளில் ஒன்றான துளசி இலைகளையும், துளசி இலைகள் போடப்பட்ட தண்ணீரை தீர்த்தமாக குடிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.