வெள்ளி, 31 மார்ச் 2023
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated: வியாழன், 29 செப்டம்பர் 2022 (09:49 IST)

ராமபிரான் நவராத்திரி பூஜை செய்ததற்கான காரணம் என்ன தெரியுமா...?

Lord Rama
நவராத்திரியின் நான்காம் நாளான இன்று நாம் வழிபடவேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி. உலகை காத்து அருளும் அம்பிகை நமக்கெல்லாம் வேண்டிய வரங்களை அருளும் காலம்தான் நவராத்திரி.


நவராத்திரி முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
அதன்படி நவராத்திரி யின் முதல் மூன்று தினங்களில் மலைமகளின் அம்சமான துர்கையை வழிபட்டோம். அந்தவகையில் நவராத்திரியின் நான்காம் நாளான இன்று நாம் வழிபடவேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி.

குமாரியின் பெயர் - ரோஹிணி; மந்த்ரம் - ஓம் ரோஹிண்யை நம:

சுவாசிநியின் பெயர் கூஷ்மாண்டா; மந்த்ரம் - ஓம் கூஷ்மாண்டாயை நம:

இன்று அம்பிகைக்கு கதிர் பச்சை மலர்களால் அதாவது மருக்கொழுந்து, தவனம் போன்ற மலர்களால் அர்ச்சனை செய்யலாம். அனைத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவள் அன்னை சக்திதான் என்பதால், நவராத்திரி நாள்களில் சக்தியின் ஆதர்ச வடிவமாக விளங்கும் பெண்குழந்தைகளை நாம் பூஜிக்கிறோம். இதன் காரணமாக நம்மில் சிறியவரையும் மதிக்கும் மனப்பான்மை நமக்கு ஏற்ப டுவதுடன், பூஜிக்கப்படும் குழந்தைகளின் மனதிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

தேவி பாகவதத்தில் மகரிஷி வியாசர் ராமபி ரான் அனுஷ்டித்த நவராத்திரி விரதம் பற்றி விளக்கி உள்ளார். ''ராமச்சந்திரா! ராவணனை அழிப்பதற்கான வழியைச் சொல்கிறேன். நீ புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியில் விரதம் இருந்து, அம்பிகையை பூஜை செய்தால், அம்பிகை உனக்கு அளவற்ற சித்திகளைத் தருவாள். இந்திரனும், விஸ்வாமித்திரர் போன்ற மகரிஷிகளும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து அம்பிகையை வழிபட்டு பலன் அடைந்திருக்கின்றனர். எனவே நீயும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டி ப்பாய்'' என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறைகள் பற்றியும் கூறினார்.

நாரதர் கூறியபடியே நவராத்திரி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மால்யவான் மலையில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ராமர் பிரதமை முதல் விரதம் இருந்து பூஜைகளை நடத்தினார். எட்டாவது நாள் அஷ்டமி தினத்தில் நள்ளிரவு வேளையில் மால்யவான் மலையின் உச்சியில் அம்பிகை சிம்ம வாகனத்தில் தோன்றி ராமருக்கு தரிசனம் தந்தாள். ராமனின் பூர்வ அவதாரங்களை உணர்த்தியதுடன், ராவணனை சம்ஹாரம்  செய்ய அருள் புரிந்து மறைந்தாள்.