வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (10:50 IST)

நவராத்திரி நான்காம் நாள் பூஜை முறைகள் என்ன...?

Navratri -  Puja Methods
நவராத்திரி காலத்தில் பகலில் செய்யும் பூஜை ஈஸ்வரனுக்கும், இரவில் செய்யும் பூஜை தேவிக்கும் உரியது. ஆனால் இந்த ஒன்பது தினங்களில் பகல், இரவு இரண்டு நேரம் செய்யும்  பூஜையும் தேவிக்கே உரியன.


ஒவ்வொரு தெய்வத்திற்கும் குறிப்பிட்ட ஒரு நாளே பூஜை செய்ய உகந்தது. ஆனால் பராசக்தியை ஒன்பது மடங்கு அதிகமாக பூஜிக்கவே நவராத்திரி என்று  ஒன்பது தினங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் தேவி மாஹேஸ்வரி, கௌமாரீ, வாராஹி என்ற பெயர்களில் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி  என்ற பெயர்களில் லட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என்ற பெயர்களில் சரஸ்வதியாகவும் பூஜிக்கப் படுகிறாள். தேவியை ஒன்பது நாட்களும் ஒன்பது  வடிவங்களில் வழிபடுவது அவசியம்.

வடிவம்: மகாலட்சுமி (சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலம்). பூஜை: 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

திதி: சதுர்த்தி. கோலம்: அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும். பூக்கள்: செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். நைவேத்தியம்: தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.

ராகம்: பைரவி ராகத்தில் பாடலாம். மாலை: கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம். பலன்: கடன் தொல்லை தீரும்.