வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2022 (09:20 IST)

நவராத்திரி நான்காம் நாள் வழிபடவேண்டிய அம்பாள் எது தெரியுமா...?

Navratri
ராமருக்கு அருள் புரிந்த நவராத்திரி நாயகி வைஷ்ணவி தேவி. நவராத்திரி முதல் மூன்று தினங்களில் மலை மகளின் அம்சமான துர்கையை வழிபட்டோம். அடுத்த மூன்று தினங்களில் நாம் மகாலட்சுமியை வழிபடவேண்டும். நான்காம் நாளில் நாம் வழிபடவேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி.


வைஷ்ணவி என்பவள் விஷ்ணுவின் சக்தி ஆவாள். திருமாலைப் போலவே நீல நிறத் திருமேனியையும், கரிய கூந்தலையும் உடையவள், தன்னுடைய இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தியவள். கருடனை வாகனமாகக் கொண்டவள். தேவி அசுரர்களை சம்ஹாரம் செய்ய புறப்பட்டபோது மும்மூர்த்தியரும், மற்ற தேவர்களும் தங்களுடைய சக்தியை அம்பிகைக்கு அளித்தனர். அப்படி விஷ்ணுவின் சக்தியைப் பெற்ற தேவியே வைஷ்ணவி. வைஷ்ணவி தேவியை வழிபட்டால், நமக்கு வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் அவளே நமக்கு அருள்வாள்.

நவராத்திரி ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வடிவமாக பாவித்து பெண் குழந்தைகளை ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபடவேண்டும். அந்த வகையில் ஐந்து வயது பெண் குழந்தைகளை நம் வசதிக்கு ஏற்றபடி ஒரு குழந்தையோ அல்லது ஒன்றுக்கு மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் வீட்டுக்கு வரவழைத்து, ரோஹிணி என்ற திருப்பெ யருடன் வழிபட வேண்டும்.

ரோஹிணி என்ற பெயருக்கு ரோகங்களை அகற்றுபவள் என்று பொருள். நான்காவது நாளில் பெண்குழந்தைகளை ரோஹிணியாக பூஜித்தால், நோய் நொடிகளில் இருந்து விடுப டுவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.

நான்காவது நாள்  காலையில் முழு அரிசியை கொண்டு படிக்கட்டு கோலம் போட வேண்டும் பிறகு லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி வழிபா ட்டுப் பாடல்களைப் பாடி விஷ்ணுவின் சக்தி யான வைஷ்ணவியை வழிபடவேண்டும். மாலையில் வைஷ்ணவி தேவிக்கு கதம்ப சாத மும், ஏதேனும் ஒரு சுண்டலும் செய்து நைவேத்தியம் செய்து, வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிரசாதமாக கொடுக்கவேண்டும்.