1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (22:19 IST)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மறுதினம் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி

சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நாளை மறுதினம் நடக்கும் நிலையில், காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் சித்திரை மாதப்பிறப்பையொட்டி நேற்று முன்தினம் கோயில் திறக்கப்பட்டது.

சபரிமலையில் நடைபெறும் முக்கிய விழாவான சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நாளை மறுதினம் நடக்கிறது.

சித்திரை முதல்தினத்தில், சாமி முன்பு காய், கனி வகைகளைப் பார்த்து தரிசனம் செய்தால்,  இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாகவும் வளமாகவும், அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

எனவே நாளை மறு நாள் காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என்றும், காய், கனிகள் அடுக்கி பூஜை செய்யப்படும் என்று, சாமிக்கு படைக்கப்பட்ட காய், கனிகள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று  கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.