1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Suseendram temple function on friday

சுசீந்திரம் கோவிலில் சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி: தேதி அறிவிப்பு..!

சுசீந்திரம்
சுசீந்திரம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் கனி காணும் நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சுசீந்திரம் தாணுமாலய கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ கனி காணும் நிகழ்ச்சியில் சிறப்பாக கொண்டாடப்படுவது 
 
அந்த வகையில் இந்த ஆண்டு நாளை மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை தாணுமாலய  சாமிக்கு கனி காணும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் தங்க ஆபரணங்கள் சுவாமிக்கு சூட்டப்பட்டு பக்தர்கள் காணும் வகையில் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தமிழ் புத்தாண்டை விட்டு காலை மாலை ஆகிய இரு வேலைகளில் சுவாமி வாகனங்களில் வீதி உலா நடைபெறும் என்பது குறிப்பிடப்பட்டது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
குமாரவாடியில் உள்ள கோ ஆலயத்தில் மஹாலட்சுமி ஹோமம்