'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' என்றால் என்ன?
ஹார்ட் அட்டாக் என்று கூறப்படும் மாரடைப்பு இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகிறது என்பதும் மாரடைப்பால் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதும் வருத்தத்துக்குரிய செய்தியாக உள்ளது
இந்த நிலையில் சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று கூறப்படும் மாரடைப்பு குறித்து தற்போது பார்ப்போம். பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டால் கை கழுத்து தாடை மார்பில் குத்துவது போன்ற வலி ஏற்பட்டு தலைசுற்றல் ஏற்படும் மேலும் பதட்டம் வியர்வை ஆகியவையும் ஏற்படும்
ஆனால் இந்த அறிகுறிகள் எதுவும் இல்லாமல் திடீரென வருவதுதான் சைலன்ட் ஹார்ட் அட்டாக். பொதுவாக நீரிழிவு நோயாளிகள் இத்தகைய அறிகுறிகளை எளிதில் உணர மாட்டார்கள் என்பதால் இதனை சைலன்ட் ஹார்ட் அட்டாக் என கூறப்படுகிறது.
வயிற்றின் மேல் பகுதியில் உள்ளது மார்பின் மையப்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏதேனும் வலி அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று இசிஜி எடுத்துக்கொண்டு சைலன்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் 40 வயதை தாண்டியவர்கள் அவ்வப்போது இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran