வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 மே 2023 (18:35 IST)

இதெல்லாம் செய்தால் சர்க்கரை நோய் கட்டாயம்.. உடனே சுதாரித்து கொள்ளுங்கள்..!

சர்க்கரை நோயை தடுப்பதற்கு நமது முன்னோர்கள் மற்றும் மருத்துவர்கள் சில வழிமுறைகளை கூறியுள்ளனர். அதன்படி நடந்தால் சர்க்கரை நோயை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
குறிப்பாக தினசரி தயிர் சாப்பிடுவது சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தினசரி தயிர் சாப்பிடுவதால் உடல் பருமனுக்கும் வழி வகுக்கும். 
 
அதேபோல் இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கத்தை பின்பற்ற வேண்டாம். இதனால் செரிமான அமைப்புக்கு போதுமான நேரம் கிடைக்காததால் செரிமானம் தாமதமாக நடைபெறும். இதனால்   சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. 
 
உணவை அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும் வயிற்றுக்கு போதுமான அளவு அல்லது அரை வயிறு தான் உணவை உண்ண வேண்டும். வயிறு நிறைய அல்லது அளவுக்கு மீறி சாப்பிட்டால் சர்க்கரை நோய் உருவாவது நிச்சயம் 
பசியெடுத்தவுடன் தான் சாப்பிட வேண்டும், பசி இல்லாத நேரத்தில் நொறுக்கு தீனி, ஜூஸ் பலகாரம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்தால் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம்
 
Edited by Mahendran