ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (19:48 IST)

முதுகலை மருத்துவர் ஹரி தேசிய அளவில் முதலிடம் - டிடிவி.தினகரன் பாராட்டு

dinakaran
எய்ம்ஸ் நடத்திய குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பிற்கான தேர்வில்,  மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி,  தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி, எய்ம்ஸ் நடத்திய குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பிற்கான தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

குடல் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாக இருக்க வேண்டிய தற்போதைய காலகட்டத்தில் குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பில் ஹரி சாதனை செய்திருப்பது போற்றத்தக்கதாகும்.

மருத்துவர் ஹரி தேர்ந்த மருத்துவராக தமிழ்நாட்டின் மக்களுக்கு குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு தனது மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்றும் அவரது மேற்படிப்பு முயற்சிகளில் மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்