1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 மே 2023 (18:49 IST)

ஆவி பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

face Steam
சளி இருமல் ஆகியவற்றிலிருந்து குணமாக ஆவி பிடிக்க வேண்டும் என்பது முன்னோர்களின் காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சளி இருமலுக்கு மட்டும் இன்றி முகப்பருக்களை நீக்குவது உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஆவி படிப்பதன் மூலம் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது. 
 
ஆயுர்வேத மூலிகை இலைகளை வைத்து ஆவி பிடித்தால் உடல் நலத்திற்கு நல்லது என்றும் வெறுமனே நீரை கொதிக்க வைத்து முகத்தில் படும்படி ஆவி பிடித்தால் கூட சருமத்திற்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. 
 
குறிப்பாக ஆவி பிடித்தால் முகப்பருக்கள் அழிந்துவிடும் என்றும் முகப்பருப்பைகளை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழுதுவிடும் என்று கூறப்படுகிறது. 
 
ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்றும் இதனால் சருமம் பிரகாசமாகவும் பொலிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
எனவே அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக அவ்வப்போது ஆவி பிடித்தாலே முகம் பொலிவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran