வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (19:01 IST)

தக்காளி சாப்பிட்டால் கண் பார்வை அதிகரிக்குமா?

Tomato
தக்காளியில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் தக்காளி சாப்பிட்டால் கண்ணுக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது.
 
 முக்கியமாக கண் பார்வை நல்ல ஒளியுடன் இருக்க வேண்டுமென்றால் வைட்டமின் ஏ அதிகம் உள்ள தக்காளியை சாப்பிடவேண்டும் என்றும் இதனால் கண் பார்வையை மேம்படுத்தி மாலைக்கண் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
மேலும் தினசரி தக்காளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் பல வியாதிகளை தடுக்கலாம் என்றும் அதுமட்டுமின்றி தக்காளி தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு மேலும் வலு சேர்க்கும் என்றும் கூறப்படுகிறது
 
 எலும்புகள் வலுவாக இருப்பதற்கு தக்காளியை தினமும் சாப்பிட வேண்டும் என்றும் மூட்டு வலி எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் வராமல் தக்காளி சாப்பிடுவதால் தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ புற்று நோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது என்றும் உடல் எடையை குறைக்கும் நீர்ச்சத்துள்ள காய்கறி தக்காளி என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran