ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2023 (10:47 IST)

நக்ஸல் நடவடிக்கைகள் 2024 தோ்தலுக்குள் ஒழிக்கப்படும்: அமைச்சர் அமித் ஷா

Amitshah
இந்தியாவில் நக்ஸல் நடவடிக்கைகள் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குள் ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த பேரணியில் என்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ ஜார்கண்ட் மாநிலத்தின் இயற்கை வளங்களை முதல்வர் ஹேமந்த் சோரன் கொள்ளை எடுத்து வருகிறார் என்றும் நிலங்களைக் கையகப் படுத்தும் நோக்கில் பழங்குடியின பெண்களை வெளிநபர்கள் திருமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு முன்பே ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள நக்சல் நடவடிக்கைகள் அனைத்தும் ஒழிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva