நடைப்பயிற்சியின்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!
ஒவ்வொரு மனிதனும் தினமும் காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் நடைப்பயிற்சி செய்யும்போது சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
குறிப்பாக தலையைத் தாழ்த்தியபடி முன்னோக்கிச் சாய்ந்தபடி நடப்பதால் கழுத்து வலி ஏற்படும் என்றும் எனவே நடக்கும் போது நேராக நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
நடைப்பயிற்சி செய்யும்போது கைகளை நன்றாக அசைத்து நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
கரடுமுரடான பாதையில் நடை பயிற்சியை செய்யாமல் சமதளத்தில் நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்றும் ஒரே இடத்தில் நடைபெற்ற செய்யாமல் அவ்வப்போது இடத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
முதலில் மிதமான வேகத்தில் தொடங்கி அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்கும் வகையில் நமது நடைபயிற்சி இருக்க வேண்டும் அதேபோல் நடைப்பயிற்சியை முடிக்கும்போது வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Edited by Siva