உடற்பயிற்சி செய்ய சரியான நேரம் எது?
ஒவ்வொரு மனிதனும் குறைந்தது ஒரு சில மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றாலும் உடற்பயிற்சி செய்வதற்கு காலை நேரமே மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
காலை நேர உடற்பயிற்சி, காலை நேரத்தில் சைக்கிள் ஓட்டுதல், காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்தல் ஆகியவை மூளையிலுள்ள மகிழ்ச்சி ஹார்மோன்களை தூண்டி விடும் என்றும் இதனால் ஞாபக சக்தி அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் அன்றைய நாள் முழுவதும் முன் கோபம் படபடப்பு ஆகியவை இருக்காது என்றும் காலை நேரம் உடற்பயிற்சி செய்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் கணிசமாக குறையும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையில் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்றும் இந்த நவீன காலத்தில் உடல் உழைப்பு மிகவும் குறைந்து வரும் நேரத்தில் காலையில் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்றும் மருத்துவர்கள் செய்து வருகின்றனர்
Edited by Siva