செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (19:28 IST)

சூரிய குளியலால் இத்தனை நன்மைகளா?

sun bath
சூரிய ஒளி படாமல் வாழ்பவர்களுக்கு பல்வேறு சரும நோய்கள் வரும் என்றும் தினமும் சில மணி நேரங்களாவது சூரிய ஒளியில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
இதனால் தான் வெளிநாடுகளில் சூரியக்குளியல் என்றே ஒரு பழக்கம் ஆரம்பமானது என்பதும் சூரியக்குளியல் செய்பவர்களுக்கு எந்த விதமான சரும வியாதிகள் வராது என்றும் கூறிவருகின்றனர்
 
சரும பிரச்சனை சூரியக்குளியல் சூரியக் குளியலால் ஏற்படாது என்றும் சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க சூரிய குளியல் மிகவும் உதவும் என்றும் சர்வ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
சொறி உள்பட ஒருசில சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சில மணி நேரம் சூரிய ஒளியில் இருந்து அதன் பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் சருமத்தில் உள்ள பூஞ்சைகள் பாக்டீரியாக்கள் ஆகியவை விலகி விடும் என்றும் கூறப்படுகிறது 
 
சூரிய ஒளி ஊடுருவுவது மிகவும் இயற்கையானது என்றும் எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது என்றும் சூரிய குளியல் மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் செய்தால் உடல்நலத்திற்கும் மிகுந்த நல்லது என்றும் கூறப்பட்டு வருகிறது
 
Edited by Mahendran