உடற்பயிற்சி செய்வதால் என்னென்ன நன்மைகள்?
உடற்பயிற்சி என்பது ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இன்றியமையாதது என்பதும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எந்தவிதமான நோயும் வராது என்பதும் முன்னோர்கள் கூறி வருகின்றனர்
உடற்பயிற்சி என்பது உடலை மட்டுமின்றி மனதையும் ஒருங்கிணைக்கும் என்பதும் எந்த விதமான உடற்பயிற்சியாக இருந்தாலும் தினந்தோறும் செய்தல் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது
நடந்து செல்லுதல், ஓடுதல், நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல் உள்பட எல்லாமே உடற்பயிற்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரெகுலராக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய் சர்க்கரை நோய் உள்ளிட்ட எந்த நோயும் வராது என்பது குறிப்பிடதக்கது
உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் துரிதப்படுத்துவது என்பதும் உடலுக்கு தேவையான சக்தி அதிகரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நுரையீரல் வேகமாக சுருங்கி விரிவடைவதால் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதும் திறமையாக செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
தினமும் குறைந்தது 30 நிமிடம் தவறாமல் உடற்பயிற்சி செய்தால் நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்கலாம் என்பதும் குறைந்த பட்சம் வாரத்திற்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்
மற்ற வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கினால் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran