புதன், 23 நவம்பர் 2022
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified புதன், 23 நவம்பர் 2022 (19:54 IST)

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரெகுலராக செய்ய வேண்டியது என்ன?

diabetes
சர்க்கரை நோய் என்பது கிட்டத்தட்ட இந்தியர்கள் அனைவருக்குமே வந்து விட்டது என்பதும் ஏராளனாப மக்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சர்க்கரை என்பது நோய் அல்ல என்றும் அது ஒரு குறைபாடு தான் என்றும் உணவு பழக்கவழக்கம் மற்றும் ரெகுலரான உடற்பயிற்சி செய்தால் சர்க்கரை நோயை வென்று விடலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தினமும் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
1. காலை உணவு மிக மிக அவசியம்.   நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை காலை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்
 
2.  நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.   
 
3. நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.   தினசரி காலை எழுந்ததும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம்.
 
4. அடிக்கடி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
 
Edited by Mahendran