1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (19:32 IST)

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இவ்வளவு ஊட்டச்சத்துக்களா?

strawberry
ஸ்ட்ராபெரி பழங்களில் அதிக ஊட்டச்சத்து இருப்பதால் அந்த பழங்களை அவ்வப்போது எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ஸ்ட்ராபெரி பழம் சுவையாக இருப்பது மட்டுமின்றி தோல் வறட்சியை போக்கும் என்றும் நீர்ச்சத்தை ஈடு செய்ய உதவுவதோடு செல் அழிவை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஸ்ட்ராபெரி பழத்தில் ஆண்டி ஆக்சிடென்ட் பொருள்கள் அதிகம் இருப்பதால் புற்றுநோயை உருவாக்கும் செல்களை ரத்தத்தில் கலப்பதை தடுக்கிறது என்றும் ஸ்டாபெரி பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலுக்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. 
 
ஸ்ட்ராபெரி பழத்தை நேரடியாக சாப்பிட்டால் ஏராளமான பலன்கள் உண்டு என்றும் ஸ்ட்ராபெரி பழத்தில் இருந்து எடுக்கப்படும் நறுமண பொருட்கள் சாக்லேட் கேக் ஐஸ்கிரீம் ஆகியவற்றிலும் கலந்து சாப்பிடலாம் என்றும் கூறப்படுகிறது. முகத்தில் தோன்றும் பரு மற்றும் வடுக்களை தடுக்கவும் ஸ்ட்ராபெர்ரி சிறப்பான மருந்து என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva