பழம்பெறும் நடிகை ஜமுனா மறைவு: திரையுலகினர் இரங்கல்
பழம்பெறும் நடிகை ஜமுனா மறைவு: திரையுலகினர் இரங்கல்
எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஜமுனா சற்றுமுன் காலமானார் அவருக்கு வயது 86
மேடை நாடகத்தில் இருந்து திரைக்கு வந்த ஜமுனா பல தமிழ் தெலுங்கு உள்பட பழமொழிகளில் நடித்தவர் என்பதும் பிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலஹாசன் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே என்ற படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருப்பார் என்பதும் எம்ஜிஆர் சிவாஜிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உடல்நல குறைவால் கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த ஜமுனா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவர் நடித்த கடைசி திரைப்படம் கமல்ஹாசன் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே என்பது குறிப்பிடத்தக்கது நடிகை ஜமுனாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran