1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (07:55 IST)

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் காலமானார். திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

E ramadoss
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் காலமானார். திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
தமிழ் திரை உலகின் பலம்பெரும் நடிகர் ஈ ராமதாஸ் காலமானதாக அவரது மகள் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் திரை உலகின் எழுத்தாளர் நடிகர் இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருபவர் ஈ ராமதாஸ். விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென நடிகர் ஈ ராமதாஸ் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பலன் உயிர் இழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என அவரது மகன் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
 

 
Edited by Siva