கண்களை சுற்றி கருவளையமா? இதை பயன்படுத்தி பாருங்கள்!
பெரும்பாலான நபர்களுக்கு கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும் நிலையில் அந்த கருவளையத்தை எப்படி போக்கலாம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
வைட்டமின் ஈ அதிகம் உள்ள எண்ணெய்யை பயன்படுத்தினால் கண்களை சுற்றி உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும் என கூறப்பட்டு வருகிறது.
வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் காபித்தூள் சர்க்கரை ஆகியவற்றை கலந்து கருவளையம் உள்ள இடங்களில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவினால் கொஞ்சம் கொஞ்சமாக கருவளையம் மறைந்து விடும் என்று கூறப்படுகிறது
தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு சென்றால் தகுந்த பலன் இருக்கும் என்றும் இதை செய்து பாருங்கள் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவும்போது அதனுடன் வைட்டமின் ஈ எண்ணெய்யை கலந்து தடவினால் முடி கொட்டும் பிரச்சனை முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva