பழம்பெரும் இயக்குர் கே.விஸ்வநாத் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!
பழம்பெரும் இயக்குர் கே.விஸ்வநாத் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!
தமிழ் தெலுங்கு திரை உலகின் பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானதை அடுத்து திரையுலகினர் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் கே.விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92. இவர் தமிழ் தெலுங்கு மொழிகளில் மொத்தம் 53 படங்களில் இயக்கியுள்ளார் என்பதும் அதேபோல் முகவரி, உத்தம வில்லன், யாரடி நீ மோகினி, குருதிப்புனல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனராக இருந்த கே விஸ்வநாத் அவர்களின் மறைவுக்கு திரையுலகினார் அஞ்சலி செலுத்து வருகின்றனர். பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் நெருங்கிய உறவினர் தான் கே.விஸ்வநாத் என்பது குறிப்பிடத்தக்கது
பத்மஸ்ரீ விருது உள்ள பல விருதுகளை பெற்ற இவர் ஆறு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பதும் நந்தி விருதுகள் உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva