1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. vijay sethupathi attended emmy award function

விருது வழங்கிய முதல் இந்தியர்!.. அமெரிக்காவில் கொடி நாட்டிய விஜய் சேதுபதி...

vijay sethupathi
தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். மக்கள் செல்வன் என்கிற பட்டமும் இவருக்கு கிடைத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் சின்ன சின்ன கதாபாத்திரங்கள், வில்லன் என எது வந்தாலும் கலக்கி வருகிறார். இந்நிலையில்தான், அமெரிக்காவில் நடைபெற்ற எம்மி விருது விழாவில் விருதை வழங்கிய முதல் இந்தியர் என்கிற பெருமையை விஜய் சேதுபதி பெற்றுள்ளார்..

கருப்பு நிற கோட் சூட் அணிந்து விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
உலக அளவில் உள்ள சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எம்மி விருதுகள் பல வருடங்களாகவே வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற 54வது சர்வதேச எம்மி விருது நிகழ்வில்தான் விஜய் சேதுபதி கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ராமர் அரக்கர்களுக்கு பயந்து ஓடினாரா? ராமாயணம் திரைப்பட குழுவினர் மீது புகார்.