டாஸ்மாக் கடைகளில் ஃபாரின் சரக்குகள் - மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைந்தபின் டாஸ்மாக் தொடர்பாக பல அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் விஜய் முதல்வரானதும் தமிழகத்தில் பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் கோவில்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 707 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
அதன்பின் மதுபான கடைகளில் மதுப்பிரியர்களிடம் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கக்கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அது ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் உணவகங்களுடன் கூடிய பார்களை கொண்டு வரும் முயற்சியிலும் தமிழக அரசு இறங்கியிருக்கிறது.
இந்நிலையில் வெளிநாட்டு மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்வதற்காக F உரிமம் பெற்ற கடைகளை FL2 உரிமம் பெற்ற கடைகளாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது நடந்தால் நிறைய வெளிநாட்டு மதுபானங்கள் தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளிலேயே கிடைக்கும். இந்த செய்தி மதுபான பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.