1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vijay talk in tn assembly now

நான் பதில் சொல்றேன்... யாரும் ஓடக்கூடாது.. சட்டசபையில் தெறிக்கவிட்ட விஜய்!...

udhyanidhi vijay
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது.. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.. இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘தவெக ஆட்சிக்கு வந்து 116 நாட்கள் ஆகிவிட்டது.. இவ்வளவு நாட்களில் இவ்வளவு கொலை நடந்திருக்கிறது.. இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்கிறது..  திமுக ஆட்சியில் நிறைய கொலைகள் நடந்திருப்பதாக சொல்லி தவெக ஆட்சிக்கு வந்தது..

ஆனால், கொலைகளை தடுக்க தவெக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. அதோடு நான் கேட்கும் எந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்வதில்லை.. அதேபோல் அமைச்சர்களிலும் சம்பந்தமில்லாத அமைச்சர்கள்தான்  பதில் சொல்கிறார்கள்.. நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்’ எனக்கூறினார்..அதற்கு சபாநாயகர் ‘திங்கட்கிழமை முதலமைச்சர் பதிலுரை இருக்கிறது.. அப்போது அவர் பதில் சொல்வார்’ எனக்கூறினார்.

அதன்பின் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘3 நாள் டைம் இருக்கு. என்ன பதில் சொல்லனும்னு பிரிப்பேர் பண்ணிட்டு வரட்டும். வழக்கம்போல திமுக மீது பழியை போடாமல், டேக் டைவர்சன் செய்யாமல், ஆக்சன் கட், சினிமா வசனம் பேசாமல் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்’ எனக் கூறினார்..

அப்போது எழுந்து பேசிய முதல்வர் விஜய் ‘உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் விரிவான பதில் அளிக்கிறேன்.. ஆனால் அன்று யாரும் ஓடிவிடக்கூடாது’ என்று சொல்லிவிட்டு முதலமைச்சர் விஜய் சட்டசபையில் இருந்து கிளம்பி சென்றார்.

அப்போது பேசிய உதயநிதி ‘ஒரு மணி நேரம் முன்பு முதல்வர் இதை சொல்லியிருந்தால் எந்த பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது..  யார் ஓடிப்போனது என்பது இப்போது மக்களுக்கு தெரியும்.. எங்களை சொல்லிவிட்டு முதல்வர் ஓடி விட்டார்’ என பேசினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கொளத்தூர் தொகுதி ரிசல்ட்!.. முக ஸ்டாலின் தொடந்த வழக்கு தள்ளுபடி!..