1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk given rice to old lady who met vijay fewdays back

முதல் உறுதி அந்த பாட்டு சந்தித்தபோது மாதத்தில் நாலு கிலோ எனக்கு அரிசி வாங்கி கொடுப்பார் என்று கேட்டார் இந்த நிலையில் தான் சேலம் அயோத்தியபட்டினம் தெற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் தவிர்க்க கட்சி சார்பாக அந்த பாட்டுக்கு வருடம் முழுவதும் தேவையான அரிசியை த

vijay
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் சென்று தமிழக விவசாயத்திற்கு 10 ஆயிரம் கன அடி நீரை மேட்டூர் அணையிலிருந்து திறந்து வைத்தார். நீரின் மீது மலர்களை தூவி அணைலிருந்து நிரை வரவேற்ற்றார். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

அதன்பின் அருகில் இருந்த சில கிராமங்களுக்கு சென்று அங்கிருந்து விவசாயிகளை சந்தித்து சிறிது நேரம் முதல்வர் விஜய் உரையாடினார்.. அப்போது ஒரு வயதான மூதாட்டியுன் விஜய் பாசமாக பழகினார்.. மூதாட்டியும் விஜயின் கன்னத்தை அன்பாக வருடி அன்பாக பேசினார்.. பாட்டியின் கையை பிடித்துக் கொண்டு முதல்வர் விஜய் சிறிது தூரம் நடந்து சென்றார்.. அதோடு தான் அணிந்திருந்த சன் கிளாஸ் பாட்டிக்கும் விஜய் போட்டுவிட்டார். அந்த சன் கிளாஸ் ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது..

vijay

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியானதால் ஓவர் நைட்டில் அந்த பாட்டி பிரபலமானார். அந்த பகுதியில் உள்ள பல விஜய் ரசிகர்களும், பொதுமக்களும், தவெக தொண்டர்களும் அந்த பாட்டியை நேரில் சந்தித்து விஜய் கொடுத்த கண்ணாடியை வாங்கி அணிந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டனர்.. அதேபோல் ஊடகங்கள் அந்த பாட்டியிடம் சென்று ‘முதல்வர் விஜய் என்ன சொன்னார்? நீங்கள் என்ன கேட்டீர்கள்? அவரே கண்ணாடியை கொடுத்தாரா?’ என்றெல்லாம் அவரிடம் பேட்டி எடுத்தார்கள்..

முதல்வர் விஜயை சந்தித்த போது ‘மாசம் நாலு கிலோ எனக்கு அரிசி வாங்கி கொடுப்பா’ என உரிமையுடன் அந்த பாட்டியிடம் கேட்டிருந்தார். இந்த நிலையில்தான் சேலம் அயோத்தியபட்டினம் தெற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் தவெக கட்சி சார்பாக அந்த பாட்டிக்கு வருடம் முழுவதும் தேவையான அரிசியை தவெகவினர் வழங்கியிருக்கிறார்கள். ‘எங்க அண்ணன் காலடிபட்ட இடமெல்லாம் சொர்க்கமாக மாறும்’ எனவும் அவர்கள் அந்த பாட்டியிடம் கூறிவிட்டு சென்றார்கள்.. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நண்பர் அஜித்துக்காக விஜய் செய்த சம்பவம்!.. மோட்டார் ஸ்போர்ட்ஸ் அறிவிக்கப்பட்டதன் பின்னணி?!..