திமுகவை அகற்றுவது காலத்தின் கட்டாயம்: கோவையில் கமல் பிரச்சாரம்!
திமுகவை தமிழகத்தில் இருந்து அகற்றுவது காலத்தின் கட்டாயம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று அவர் பிரச்சாரம் செய்தபோது திமுக உருவானது காலத்தின் கட்டாயம் என்றும், தற்போது அதை தமிழகத்திலிருந்து அகற்றுவம் காலத்தின் கட்டாயமே என்றும் கூறினார்
மேலும் மக்களின் ஏழ்மையை இலவசங்கள் அளிக்காது என்றும் அவர் தெரிவித்தார். கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக ஆளும் கட்சியான அதிமுக விட எதிர்க்கட்சியான திமுகவை அதிகம் விமர்சனம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆட்சி மாற்றம் தேவை என அனைவரும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன், சீமான், தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் அதிமுகவை விட அதிகமாக திமுகவை விமர்சனம் செய்து வருவது அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.