புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2020 ஒரு கண்ணோட்டம்
Written By சினோஜ்
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (20:34 IST)

2020- முக்கிய நிகழ்வுகள் – சூப்பர் ஸ்டார்களின் படங்கள் ரிலீஸ் ஒத்திவைப்பு !

இந்த ஆண்டு சினிமாத்துறையினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிகம் எதிர்ப்பார்த்த படங்கள் அஜித்தின் ’வலிமை’, விஜய்யின் ’மாஸ்டர்’. ரஜினியின் ’அண்ணாத்த’, கமலின் ’இந்தியன் -2’. ராகவா லாரன்ஸின் இந்தி ரிமேக்கான ’லட்சுமி’.

மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ள நிலையில் இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்புகள்  அதிகரித்துள்ளது.  இப்படம் இவ்வாண்டின் கடந்த  ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாகியிருக்க வேண்டும் ஆனால் கொரோனாவால் தள்ளிப்போனது.

அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்காக அந்தப் படத்துக்கு 1000 தியேட்டர்கள் மேல் ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் சில பிரச்சனைகள் உள்ளதால் ஏப்ரல் மாதத்தின் போது ரிலீஸ் செய்ய வேண்டுமென விநியோகஸ்தர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
 
வலிமை


ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துவரும் படம் வலிமை. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குநர் போனி கபூர் தயாரித்துவருகிறார்.

வலிமை சூட்டிங்கில் ஈடுபட்ட அஜித் காயம் அடைந்ததால் ஷூட்டிங் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரிக்குள் இப்பட ஷூட்டிங்கை முடிக்கவேண்டுமென அவர் கூறியுள்ளதால் இப்படப்புகள் ஹைதராபாத்தில் வேகமாக நடைபெற்றுவருகிறது. அஜித்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகளும் வைரலானது.

இப்படத்தின் அப்டேட் குறித்து அஜித் ரசிகர்கள் கேட்டு வந்தனர். சமீபத்தில் அஜித்தின் மேலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கடிதம் எழுதி வெளியிட்டிருந்தார்.

அதில், படப்பிடிப்பினால் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு. அஜித்குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு. போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து வலிமை படம் அப்டேட் குறித்து உரிய முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் , அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு  வலிமை அப்டேட் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது யுவன்சங்கர் ராஜா, வலிமை படத்திற்கான இசையமைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

ரஜினியின் அண்ணாத்த படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கால ஊரடங்கலா இதன் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இன்று ரஜினிகாந்த் மற்றும் நயன் தாரான் ஹுட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஹதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டால் விரைவில் கட்சி தொடங்குவதற்காக நடவடிக்கைகளில் ரஜினி ஈடுபடுவார் என தெரிகிறது.  ,மேலும் அண்ணாத்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு அல்லது அடுத்தாண்டு கோடைவிடுமுறைக்கு  தியேட்டரில் ரிலீஸாகும்  என தகவல் வெளியாகிறது.

லட்சுமி

தமிழ் திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.

அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற 'முனி'. இப்படத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் 'காஞ்சனா' என்ற பெயரிலும் பிறகு 'காஞ்சனா-2 ' என வெளியான அனைத்து பாகங்களிலும் லாரன்ஸ் இயக்கி நடித்து ஹிட் கொடுத்தார்.

அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பேய் பட ரசிகர்களின் வரவேற்பால் காஞ்சனா பெரும் வரவேற்பை பெற்று சாதனையை படைத்து ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. முனி , காஞ்சனா, காஞ்சனா 1 , காஞ்சனா 2, காஞ்சனா 3 என அத்தனை படமும் வசூலில் சாதனை செய்தது.

தமிழ், தெலுங்கை தொடர்ந்து காஞ்சனா திரைப்படம் தற்ப்போது இந்தியில் அக்சய் குமாரை வைத்து லட்சுமி பாம் படத்தை லாரன்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்தார். கடந்த  தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 9ம் தேதி ’’டிஸ்னி ஹாட்ஸ்டா’’ர் தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் யூடியூபில் வெளியாகி ஒரு சாதனை நிகழ்த்தியது. அதேபோல் இப்படத்தின் வசூல் சாதனைப் படைத்துள்ளது.  இப்படமும் விரைவில் தியேட்டரில் ரிலீஸாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. தியேட்டரில் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு இப்படம் த்ரில்லர் விருந்தாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

 
 சூரரைப்போற்று


நடிகர் சூர்யா தயாரித்து நடித்த்துள்ள சூரரைப் போற்று திரைப்பட, மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அமேசான் ஓடிடியில் வெளியாகி சாதனை படைத்தது.

இப்படத்தின் நடித்த பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில் இப்படமும் அடுத்த ஆண்டு தியேட்டரில் ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.