வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (16:14 IST)

’’விஜய் சேதுபதியின் புதுப் படத்திற்கான தடை நீக்கம்..’’ ரசிகர்கள் மகிழ்ச்சி!!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் மாமனிதன். இப்படத்திற்கு விதிக்கப்பட்ட  தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் மாமனிதன்.  இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ தயாரித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே முடிவடைந்தபின், அபிநாமி மெகா மாஸ் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதில், மாமனிதன் படத்தின் சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறிவனத்தில்  வாங்கியிருப்பதால் விநியோக உரிமையை தங்களுக்குக் கொடுக்காமல் வெளியிடத் தடை விதிக்கவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இப்பாடத்திற்கு இடைக்காலத் தடைவிதிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. அப்போது, அபிராமி மெகா மாஸ் நிறுவனத்துடன் ,இப்படத்தின் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா  விநியோக உரிமை தொடர்பாக எந்த ஒப்பந்தமும்  செய்யவில்லை. எனவே அபிராமி மால் கூறியுள்ள அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை அதனால் படத்தை வெளிவிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த இருதரப்பு வாதிப்புகளையும் கேட்ட நீதிபதி மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி அதிரடி உத்தரவிட்டார்.

இதனால் மாமனிதன் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.#maamanithan #vijaysethupathy