திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (15:41 IST)

முதல் இடத்தில் மகேஷ் பாபு; விஜய் எங்கே? டிவிட்டர் வெளியிட்ட டாப் 10!

தென் இந்தியாவில் எந்த நடிகரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு அதிகப்படியான ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
2020 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் நுழைந்துள்ள நிலையில் இந்தியாவில் அதிகம் ட்ரெண்டான அதிகம் பேசப்பட்டவை குறித்த பட்டியலை ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தென்னிந்தியாவில் எந்த நடிகரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு அதிகப்படியான ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
இந்த பட்டியலில் முதல் இடத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இடம் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடத்தில், பவண் கல்யாண், விஜய், ஜூனியர் என்.டி.ஆர், சூர்யா, அல்லு அர்ஜூன், ராம் சரண், தனுஷ், மோகன்லால், சிரஞ்சீவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.