வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (13:02 IST)

41 தொகுதிகளா? வாய்ப்பே இல்ல... இப்பவே கைவிரிக்கும் அதிமுக!

அதிமுக தரப்போ வருகிற தேர்தலில் தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 15 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் வர இருக்கும் நிலையில் அதிமுக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.  
 
இந்நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இன்னும் அந்த கூட்டணியில் இருப்பதை உறுதி செய்யவில்லை. இருப்பினும் வருகிற தேர்தலில் 41 இடங்களை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாக தெரிகிறது. 
 
ஆனால் இதற்கு அதிமுக தரப்போ வருகிற தேர்தலில் அதிகபட்சமாக 15 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே தற்போது குறைந்த அளவிலான இடங்களை ஒதுக்கினால் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா? என சந்தேகம் எழுந்துள்ளது.