1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (17:25 IST)

விஜய்யின் ‘’மாஸ்டர்’’ படத்தை வெளியிட முடிவு ?

சேலத்தில் நடிகர்  விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்காக அந்தப் படத்துக்கு 1000 தியேட்டர்கள் மேல் ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் சில பிரச்சனைகள் உள்ளதால் ஏப்ரல் மாதத்தின் போது ரிலீஸ் செய்ய வேண்டும் என வெளிநாட்டு உரிமைகளை வாங்கியுள்ள விநியோகஸ்தர்கள் தரப்பில் அழுத்தம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போது பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படத்தின் டிரெயிலரை வெளியிட இப்படத்தின் தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அத்துடன், இப்படத்தின் சேட்டிலை உரிமையைப் பெற்றுள்ள சன் டிவி நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகிறது. ’’தலைவா’’ படத்திற்காக சன் டிவியில் பேட்டி கொடுத்ததற்குப் பிறகு நடிகர் விஜய்’’ மாஸ்டர்’’ படத்திற்காக டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில்,  சேலம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் சுமர் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தியேட்டர்களில் 100% ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.#master #vijay #vijayfans #vijaysethupathy #salem