திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (15:41 IST)

1.5 கோடினா சும்மாவா... விற்பனையில் அசால்டு பண்ணிய ரியல்மி!!

ரியல்மி பிராண்டு இந்தியாவில் சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போவின் துணை ப்ராண்டான ரியல்மி கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகம் ஆனது. துவக்கம் முதலே விற்பனையில் அசத்தி ரியல்மி இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக மாறியது. 
 
இந்நிலயில், ரியல்மி தனது வியாபாரத்தை துவங்கிய முதல் வருடத்திலேயே சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அதோடு அடுத்தடுத்த ஆண்டுகளில் விற்பனை இரு மடங்கு உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி ரியல்மி ஸ்மார்ட்போன் சந்தையில் நான்காவது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில் ரியல்மி ஏழாவது இடத்தில் உள்ளது என்பது கூடுதல் தகவல்.