செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2019 (13:54 IST)

இம்முறை வேற லெவல்... குறைந்தது ஒப்போ ஸ்மார்ட்போன் விலை!

ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. 
 
சீன நிறுவனமான ஒப்போ கடந்த ஆண்டு இந்தியாவில் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன்னை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட போது ரூ.19,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.  
 
அதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் மீது இரண்டு முறை விலை குறைக்கப்பட்டு ரூ.16,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆம், ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் விலையில் ரூ.2000 குறைக்கப்பட்டுள்ளது.
இதை தவிர்த்து மேலும் ஒரு ஸ்மார்ட்போன் மாடல் மீதும் விலை குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு, 
  • ஒப்போ ஏ1கே (2 ஜிபி ராம் + 32 ஜிபி மெமரி) விலை ரூ.500 குறைக்கப்பட்டு ரூ.7,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  
  • ஒப்போ எஃப்11 (4 ஜிபி ராம் + 128 ஜிபி மெமரி) விலை ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.14,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒப்போ ஏ9 2020 மற்றும் ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த விலை குறைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.