ஞாயிறு, 9 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (14:11 IST)

பட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன் + பவர் பேங்க்: ரியல்மி அசத்தல்!

ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் பட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன் மற்றும் பவர் பேங்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
 
ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புதிய படைப்பான ரியல்மி XT ஸ்மார்ட்போனுடன் இந்த பட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன் மற்றும் பவர் பேங்கையும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் அமசங்கள் பின்வருமாறு... 
 
ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன் அம்சங்கள்:
  • பெஸ்டெக்னிக் BES2300 ஆடியோ சிப், ப்ளூடூத் 5.0, 11.2 எம்.எம். டிரைவர்கள்
  • மெட்டல் / சிலிகான் ஜெல் நிக்கல் டைட்டானியம் மெமரி அலாய்
  • பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IPX4)
  • 110 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
  • விலை: ரூ.1,799; பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. 
ரியல்மி பவர் பேங்க் அம்சங்கள்:
  • 10000 எம்.ஏ.ஹெச். லித்தியம் பாலிமர் பேட்டரி
  • யு.எஸ்.பி. டைப்-ஏ மற்றும் யு.எஸ்பி. டைப்-சி டூயல் அவுட்புட்
  • 18 வாட் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங், 12 அடுக்கு பாதுகாப்பு
  • தடிமன்: 12.5 எம்.எம்., எடை: 230 கிராம்
  • 18 வாட் சார்ஜரில் 3.28 மணி நேரத்திலும், 10 வாட் சார்ஜரில் 5.36 மணி நேரத்திலும் சார்ஜ் ஆகிடும்
  • விலை: ரூ.1,299, எல்லோ, கிரே மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. 
இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் கிடைக்கும்.